என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்"
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த நாகூரில், புதுமனைத்தெரு, பீரோடும் தெரு, தர்கா அலங்கார வாசல் பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு ஆணையருக்கு புகார் சென்றது.
இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலெட்சுமி உத்தரவின்படி மேற்குறிப்பிட்ட பகுதியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுகாதார மற்ற சூழலில் உணவு பொருட்களை விற்பனை செய்த 4 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நோட்டீசுகள் வழங்கப்பட்டன. 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதே நிலை தொடர்ந்தால் மேற்படி சட்டத்திற்கு உட்பட்டு ஓட்டல் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. #PlasticBan
விராலிமலை:
தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத் தொடரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேனீர் கோப்பைகள், பிளாஸ்டிக் தூக்குபைகள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள் போன்றவை இலுப்பூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவுரையின் படி பேரூராட்சியில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வாரச்சந்தை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி மற்றும் பேரூராட்சி பணியாளர்களால் இன்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வாரச்சந்தை கடைகளில் பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அபராத கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் மளிகை, பெட்டிகடைகளில் பிளாஸ்டிக்பைகளின் பயன்பாட்டை வியாபாரிகள் நிறுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையர் சங்கர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
நேற்று நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி பகுதியில் கடைவீதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டபோது 25 கடைக்காரர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் ஜெயங்கொண்டத்தில் சுற்றுச்சூழல் மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை வணிக நிறுவனங்கள் பயன்படுத்த கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால், வணிகர்கள், சில்லரை வியாபாரிகள், தங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் மளிகை, பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்ததடை விதிக்கப்பட்டது.
எனவே தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகரில் 50 மைக்ரானுக்கு குறைவாக, ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என்று கடைகாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டது. மேலும் கடைகாரர்களிடமிருந்து பறிமுதல் செய்யும் போது வேடிக்கை பார்த்த பொது மக்களிடமும் பிளாஸ்டிக் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் அவ்வாறு கடைகாரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பாலித்தீன் பைகள், பாலித்தீன் விரிப்புகள், பிளாஸ்டிக்கப்புகள் உள்ளிட்டவற்றை ஓரிடத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்